14.10.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு

0

14.10.2024-4AM  ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை  தொகுப்பு

*
அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை  அறிக்கையை பார்க்கவும்.




2024  அக்டோபர் 14,15,16,17 மழை பொழிவு ஆய்வறிக்கை:

13.10.2024 நள்ளிரவு 
உருவானது தாழ்வுப் பகுதி.

டெல்டா முதல் வட மாவட்டங்கள் வரை தொடங்கியது மழை.

இனி அக் 17 மதியம் வரை மழை இருக்கும் .

அக்14,15 திங்கள் செவ்வாய்  எதிர்பார்ப்பு:

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,விழுப்புரம் ,புதுச்சேரி,கடலூர்,மயிலாடுதுறை,காரைக்கால்,
நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,ராணிப்பேட்டை
ஆகியமாவட்டங்களில்  பரவலாக மிதமான மழையும் பல இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில்  மிக கனமழைக்கும்
பெய்ய வாய்ப்பு.

சென்னை உள்ளிட்ட மேற்கண்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அக் 14,15 நாள் ஒன்றிற்கு தலா 15செமீ முதல் 18 செமீ  வரை எட்டலாம்.

விழுப்புரம்,கடலூர்,புதுச்சேரிகள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை
மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அக் 14 திங்கள் 20 செமீ வரை மழை எட்டலாம்.அக் 15  செவ்வாய் மேற்கண்ட மாவட்டங்களில் 
10செமீ அளவாக குறையும்.

வேலூர்,திருப்பத்தூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,
கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம்,நாமக்கல்,திருச்சி வடக்கு பகுதிஅரியலூர்,
பெரம்பலூர் மற்றும் தமிழ்நாடு எல்லையோர ஆந்திரா,
கர்நாடகா மாவட்டங்கள் வரை இரவுக்குள் மழை பரவலாகி அங்கும் கன மழை பொழிய வாய்ப்பு.
அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கன மழை வரை இருக்கும்.

அக் 16,17 புதன்,வியாழன் எதிர்பார்ப்பு
தாழ்வுப்பகுதியானது  தீவிர தாழ்வு அதாவது Well Marked Low Pressure Area வரை திவிரம் அடைவது உறுதி.மண்டலமாக மாற சிறு வாய்ப்பும் உள்ளது.எது எப்படியோ MJO அமைப்பு நிலநடுக்கோட்டு நீராவியை கூடுதலாக சுமந்து வருகிறது.

அக் 16 மற்றும் அக் 17 முற்பகல் புதுச்சேரி - நெல்லூர் இடைப்பட்ட பகுதியை தாழ்வு அமைப்பு நெருங்கி நெல்லூர் பழவேற்காடு இடையே கடக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது.

அக் 16  அக் 17 முற்பகல் 
(24மணி+ 6 மணி )
30மணி நேரத்தில் திருவள்ளூர்,சென்னை,செங்கல்பட்டு,
காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர்,
விழுப்புரம்,திருவண்ணாமலை ,கள்ளக்குறிச்சி,கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு ஒட்டிய ஆந்திர மாவட்டங்கள், பெங்களூரு,கோலார் உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளில் தொடர்ச்சியாக மழை முதல் கனமழை வரை இருக்கலாம்.
சென்னை  திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு
ராணிப்பேட்டை உள்ளிட்ட  மாவட்டங்களில் 
கனமழை முதல் அதிகனமழை பெய்யலாம்.

அதாவது 
அக் 16  அக் 17 முற்பகல் 
(24மணி+ 6 மணி )
30மணி நேரத்தில்
25 CM முதல் 30 CM வரை பெய்யலாம்.
அடுத்தடுத்த நிகழ்வுகள் எப்படி?

2024 வட கிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வுகள் அடுத்தடுத்து வரும், ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைவெளி இருக்கும். வலுவான நிகழ்வுகள் வடகிழக்கு மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை மழை கொடுக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி நிகழ்வுகள் வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் அதிக மழை தரும். டிசம்பர் பிற்பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழை தரும். ஒவ்வொரு நிகழ்வும் கடக்கும் இடம் ஒன்றாக இருக்கும், மழை தரும் இரு காற்று இணையும் இடம் வேறு இடமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிவை தரும். அரபிக்கடல் காற்று வங்கக்கடல் வரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் நல்ல மழை தரும்.

அமைவு 2
அக்டோபர் 19 முதல் 25 முடிய  நிகழ்வு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் வரை கடலோர மாவட்டங்களில் கனமழை தரும்.தமிழ்நாட்டிற்கு லேசான மழை அவ்வப்போது தெரிகிறது.

அமைவு 3
   அடுத்த நிகழ்வு உருவாகி அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 முடிய நல்ல மழை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி தெரிகிறது.
 அக்டோபர் 31 தீபாவளி நாள்களில் விட்டு விட்டு ஆங்காங்கே மழை தெரிகிறது.
 
அமைவு 4
நவம்பர் 7 முதல் நவம்பர் 14 வலுவான நிகழ்வுகள்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உட்பட நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது.
நவம்பர் 15, 16,17, 18 நல்ல மழை தெரிகிறது.

அமைவு 5
நவம்பர் 22,23,24,25,26 மீண்டும் வலுவான நிகழ்வுகள்  அனைத்து மாவட்டங்களில் அதிக மழை தெரிகிறது.
அமைவு 6
நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 முடிய வலுவான நிகழ்வுகள் நல்ல மழை தெரிகிறது. (மிகவும் வலுவான நிகழ்வாக தெரிகிறது.)

அமைவு 7
டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23 முடிய மன்னார் வளைகுடா தென் தமிழ்நாடு வழி அரபிக்கடல் நிகழ்வு  நல்ல மழை.

அமைவு 8
டிசம்பர் 26 முதல் 31 இலங்கை, குமரிக் கடல் நிகழ்வு.

அமைவு 9
 ஜனவரி  முதல் வாரம் நிலநடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல்  குமரிக் கடல் நிகழ்வு தென் மாவட்ட மிதமான மழை வாய்ப்பு.

வலுவான நிகழ்வுகளும் நிறைய மழை பொழிவும்
*
2024 வட கிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வுகள் அடுத்தடுத்து வரும், ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைவெளி இருக்கும். வலுவான நிகழ்வுகள் வடகிழக்கு மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை மழை கொடுக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி நிகழ்வுகள் வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் அதிக மழை தரும். டிசம்பர் பிற்பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழை தரும். ஒவ்வொரு நிகழ்வும் கடக்கும் இடம் ஒன்றாக இருக்கும், மழை தரும் இரு காற்று இணையும் இடம் வேறு இடமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிவை தரும். அரபிக்கடல் காற்று வங்கக்கடல் வரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் நல்ல மழை தரும்.
தினசரி அப்டேட்ஸ் வானிலை அறிவியலில் வழங்கப்படும்  அதில் மாறுதல், துல்லியம் அறிந்து பணிசெய்து லாபம் அடைய கேட்டுக்கொள்கிறேன்.*

ந. செல்வகுமார்
14.10.2024-4AM
வெளியீடு

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog