21.10.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு

3 minute read
0

21.10.2024-4AM  ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை  தொகுப்பு

அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை  அறிக்கையை பார்க்கவும்.

2024 வட கிழக்கு பருவமழையும் அடுத்தடுத்த நிகழ்வுகளும் :

வட கிழக்கு பருவமழை  அக்டோபர் 16 தொடங்கினாலும் அக்டோபர் இறுதியில் தான் முழுமையான வட கிழக்கு காற்றுடன் மழை மேகங்கள் வானில் நகரத்தொடங்கும் , நவம்பர் முதல் வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.

2024 வட கிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வுகள் அடுத்தடுத்து வரும், ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைவெளி இருக்கும். வலுவான நிகழ்வுகள் வடகிழக்கு மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை மழை கொடுக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி நிகழ்வுகள் வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் அதிக மழை தரும். டிசம்பர் பிற்பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழை தரும். ஒவ்வொரு நிகழ்வும் கடக்கும் இடம் ஒன்றாக இருக்கும், மழை தரும் இரு காற்று இணையும் இடம் வேறு இடமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிவை தரும். அரபிக்கடல் காற்று வங்கக்கடல் வரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் நல்ல மழை தரும்.

அமைவு 1
 அக்டோபர் 13,14 தேதியில் வங்கக்கடலில் தாழ்வுநிலை மற்றும் தாழ்வுப்பகுதி என இருவேறு நிகழ்வுகள் இணைந்து அமைந்தது.
 
 முதலில் தாழ்வு நிலை  தனியாக பிரிந்து சென்று வடமாவட்டங்கள் வழியாக கடந்து  சென்னை, பெங்களூரு பகுதிகளில் அதிகன மழை பொழிவை கொடுத்து அரபிக்கடல் சென்று அக்டோபர் 19,20,21,22 தேதிகளில் ஓமன், ஏமன் நோக்கி நகரும்.
இரண்டாம் நிகழ்வு மண்டலமாகி  சென்னையை நெருங்கி பாதிக்கும் மழை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மண்டலத்திற்கு குளிர்விக்கும்  காற்று அமைப்பு இழந்த நிலையில் மழை பொழிவை கொடுக்காமல் நெருங்கி வந்து செயலிழந்தது.
இது தமிழ்நாடு கடையோரம் மற்றும் கடல்பகுதிக்கு மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியாக நீடித்து அக்டோபர் 22  முடிய மாலை, இரவு, அதிகாலை மழை பொழிவை கொடுத்து அரபிக்கடல் நோக்கி செல்லும்.
 
அமைவு 2
அக்டோபர் 19  தாய்லாந்து வளைகுடா காற்று சுழற்சி அக்டோபர் 20 அந்தமான் கடல் பகுதி வந்து தாழ்வுப்பகுதி முதல் DANA புயல் வரை வடக்கு அந்தமான் கடல் பகுதியில் தீவிரம் அடைந்து அக்டோபர் 25 வடக்கு ஆந்திரா அல்லது ஒடிசா கரையை 100 KMPH வேகத்திற்குள் கடந்து தொடந்து வளிமண்டல உயர் அடுக்கு வலுவான எதிர் காற்றால் திசை மாற்றப்பட்டு தெற்கு சட்டிஸ்கர், தெலங்கானா, வடக்கு கர்நாடகா வழியாக பயணித்து வழித் தடங்களில் ஹைதராபாத் உட்பட அதீத மழை பொழிவை கொடுத்து செயலிழந்து அரபிக்கடல் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அக்டோபர் 23 முதல் 27 முடிய    ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் வரை கடலோர மாவட்டங்களில் கனமழை தரும். தமிழ்நாட்டிற்கு  மிதமான மழை கொடுக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை தெரிகிறது.

அமைவு 3
   அடுத்த நிகழ்வாக சாதாரண வளிமண்டல சுழற்சி உருவாகி அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 முடிய லேசான மிதமான மழை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி தெரிகிறது.
 அக்டோபர் 31 தீபாவளி நாள்களில் விட்டு விட்டு ஆங்காங்கே லேசான மழை தெரிகிறது.
 
அமைவு 4
நவம்பர் 7 முதல் நவம்பர் 14 வலுவான நிகழ்வுகள்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உட்பட நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது.
நவம்பர் 15, 16,17, 18 நல்ல மழை தெரிகிறது.

அமைவு 5
நவம்பர் 22,23,24,25,26 மீண்டும் வலுவான நிகழ்வுகள்  அனைத்து மாவட்டங்களில் அதிக மழை தெரிகிறது.

அமைவு 6
நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 முடிய வலுவான நிகழ்வுகள் நல்ல மழை தெரிகிறது. (மிகவும் வலுவான நிகழ்வாக தெரிகிறது.)

அமைவு 7
டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23 முடிய மன்னார் வளைகுடா தென் தமிழ்நாடு வழி அரபிக்கடல் நிகழ்வு  நல்ல மழை.

அமைவு 8
டிசம்பர் 26 முதல் 31 இலங்கை, குமரிக் கடல் நிகழ்வு.

அமைவு 9
 ஜனவரி  முதல் வாரம் நிலநடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல்  குமரிக் கடல் நிகழ்வு தென் மாவட்ட மிதமான மழை வாய்ப்பு.

வலுவான நிகழ்வுகளும் நிறைய மழை பொழிவும்

2024 வட கிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வுகள் அடுத்தடுத்து வரும், ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைவெளி இருக்கும். வலுவான நிகழ்வுகள் வடகிழக்கு மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை மழை கொடுக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி நிகழ்வுகள் வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் அதிக மழை தரும். டிசம்பர் பிற்பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழை தரும். ஒவ்வொரு நிகழ்வும் கடக்கும் இடம் ஒன்றாக இருக்கும், மழை தரும் இரு காற்று இணையும் இடம் வேறு இடமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிவை தரும். அரபிக்கடல் காற்று வங்கக்கடல் வரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் நல்ல மழை தரும்.

தினசரி அப்டேட்ஸ் வானிலை அறிவியலில் வழங்கப்படும்  அதில் மாறுதல், துல்லியம் அறிந்து பணிசெய்து லாபம் அடைய கேட்டுக்கொள்கிறேன்.*

ந. செல்வகுமார்
21.10.2024-4AM
வெளியீடு.
==============

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog