08.10.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:

0

08.10.2024-4AM  ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை  தொகுப்பு:





அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை  அறிக்கையை பார்க்கவும்.

தற்போது தென்மேற்கு பருவமழை முடியாவிட்டாலும் 
வடகிழக்கு பருவமழை  தொடங்கா விட்டாலும்
 அக்டோபர் 1 முதல் பொழியும் மழைப் பொழிவானது   வடகிழக்கு பருவமழை கணக்கில்  எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை -2024
ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 முடிய உங்கள் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை  தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இயல்பை விட 18% கூடுதலான மழையை கொடுத்திருக்கிறது.

விரிவான வானிலை அறிக்கை.

தமிழ்நாடு அதனை ஒட்டிய வங்கக்கடல் வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சியும், கேரளாவை ஒட்டிய கடல் பகுதி முதல் லட்சத்தீவு 
கடல் பகுதி வரை வளி மண்டலத்தில் மற்றொரு  கீழடுக்கு காற்று சுழற்சியும் நீடிக்கிறது.
நில நடுக்கோட்டுக்கு தெற்கேயுள்ள  நீராவியை கொண்டுவரும் MJO அமைப்பும் தீவிரமாக உள்ளது.

அக்டோபர் 8 முதல் அக்டோபர் 16 முடிய
*
டெல்டா மாவட்டங்கள், தென் கடலோரம் உட்பட மேற்கு தொடர்ச்சி மலை முதல் வங்கக் கடலோரம் வரை அனைத்து மாவட்டங்களிலும் மாலை இரவு நேரங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே  மழை முதல் கன, மிக கனமழை வரை பொழிந்து அனைத்து இடங்களில் அடுத்தடுத்த மணி நேரங்களில் அல்லது ஒதுக்கி இருக்கும் இடங்களில் அடுத்தடுத்த நாள்களில் பொழியும்.

அக்டோபர் 11,12 ஆயுதபூஜை விஜய தசமி மழை வானிலை தெரிகிறது.

2024 தென் மேற்கு பருவமழை அக்டோபர் 14, 15 முடிவுக்கு வரும்.
2024 வடகிழக்கு பருவமழை  எப்படி?

இந்தியப் பெருங்கடல் IOD அக்டோபர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.

பசிபிக்கடலில் லா-நினா அமைப்பு தொடங்கியது, இது டிசம்பர், ஜனவரி மாதங்களில் வலுவான லா-நினா அமைப்பை அடையும்.

ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 அக்டோபர் முதல் ஜனவரி முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.

காற்று திசை மாறும் காலம் :
அக்டோபர் 15,16

வடகிழக்கு பருவமழை.
அக் 17,18 இல் தொடங்கும்.

இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.
மழை  அமைவு எதிர்பார்ப்பு :

அமைவு 1
அக்டோபர் 17 முதல் 25 முடிய தென் மாநிலங்கள் பரவலாக மிதமானது முதல் சற்று கனமழை வரை.

அமைவு 2
   அடுத்த நிகழ்வு உருவாகி அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 முடிய நல்ல மழை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி தெரிகிறது.
 அக்டோபர் 31 தீபாவளி நாள்களில் மழை தெரிகிறது.
 
அமைவு 3
நவம்பர் 7 முதல் நவம்பர் 14 வலுவான நிகழ்வுகள்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உட்பட நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது.
நவம்பர் 15, 16,17, 18 நல்ல மழை தெரிகிறது.

அமைவு 4
நவம்பர் 22,23,24,25,26 மீண்டும் வலுவான நிகழ்வுகள்  அனைத்து மாவட்டங்களில் அதிக மழை தெரிகிறது.

அமைவு 5
நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 முடிய வலுவான நிகழ்வுகள் நல்ல மழை தெரிகிறது.

அமைவு 6
டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23 முடிய மன்னார் வளைகுடா தென் தமிழ்நாடு வழி அரபிக்கடல் நிகழ்வு  நல்ல மழை.

அமைவு 7
டிசம்பர் 26 முதல் 31 இலங்கை, குமரிக் கடல் நிகழ்வு.

அமைவு 8
 ஜனவரி  முதல் வாரம் நிலநடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல்  குமரிக் கடல் நிகழ்வு தென் மாவட்ட மிதமான மழை வாய்ப்பு.

வலுவான நிகழ்வுகளும் நிறைய மழை பொழிவும்
2024 வட கிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வுகள் அடுத்தடுத்து வரும், ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைவெளி இருக்கும். வலுவான நிகழ்வுகள் வடகிழக்கு மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை மழை கொடுக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி நிகழ்வுகள் வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் அதிக மழை தரும். டிசம்பர் பிற்பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழை தரும். ஒவ்வொரு நிகழ்வும் கடக்கும் இடம் ஒன்றாக இருக்கும், மழை தரும் இரு காற்று இணையும் இடம் வேறு இடமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிவை தரும். அரபிக்கடல் காற்று வங்கக்கடல் வரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் நல்ல மழை தரும்.

தினசரி அப்டேட்ஸ் வழங்கப்படும்  அதில் மாறுதல், துல்லியம் அறிந்து பணிசெய்து லாபம் அடைய கேட்டுக்கொள்கிறேன்.*

ந. செல்வகுமார்
8.10.2024-4AM
வெளியீடு.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog