8.9.2024-4AM ந.செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:

0

8.9.2024-4AM  ந.செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை  தொகுப்பு:

*
அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை  அறிக்கையை பசர்க்கவும்.
இன்றைய மழை வாய்ப்பு

*இன்று செப்டம்பர் 8 திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு புதுச்சேரி கடலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே மழை கூடுதல் வாய்ப்பு தெரிகிறது.
*செப்டம்பர் 8,9,10 தேதிகளில் வால்பாறை, நீலகிரி மேற்கு
*மிதமான மழை ஓரிரு முறை இருக்கும்.
*கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் தூறல், நனைக்கும் மழை இருக்கும்.
*புதுக்கோட்டை முதல் திருவள்ளூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை இருக்கும்.
*திருவள்ளூர் முதல் புதுச்சேரி வரை இடைப்பட்ட பகுதியில் சென்னை உட்பட மிதமான மழைக்கு கூடுதல் வாய்ப்பு.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான / மிதமான மழை வாய்ப்பு.
*
நிகழ்வு 1
பிலிப்பைன்ஸ் தென்சீனா, வியட்நாம், லாவோஸ் கடந்து செயலிழக்கும் யாகி சூப்பர் புயல். தாழ்வு பகுதியாக மியான்மர் வழியாக வட கிழக்கு மாநிலங்களில் நுழைந்து பங்களாதேஷ் வழியாக செப் 11 இல் மேற்கு வங்க மாநிலம் வரும்.
*
 நிகழ்வு 2.
 ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டிணத்திற்கு கிழக்கே மையம் கொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் ஆழ்ந்த தாழ்வுமண்டலம் வரை தீவிரம் அடைந்து  செப் 10 மேற்கு வங்கம் வடக்கு ஒடிசா கரையை கடக்கும்.
 
செப்டம்பர் 25 வரை மழை எதிர்பார்ப்புகள்.:

இந்திய வானிலை ஆய்வு மையம் ஆந்திரர ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலட் வழங்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 9 காலை வரை விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களுக்கு மட்டும் கன, மிக கனமழை வாய்ப்பு உள்ளது. அது விஜயவாடா, ஹைதராபாத் வெள்ளம் போல இருக்காது. 
செப்டம்பர் 8 ஞாயிறு மாலை  கிருஷ்ணா, கோத்தாவரி மாவட்டங்கள் விஜயவாடா மாநகரம்  உட்பட ஒரு முறை ஒரு அச்சமூட்டும் மழை சிறிது  நேரம்  இருக்கலாம். அதே போல ஹைதராபாத் க்கும் மாலை ஒரு முறை  சில மணி நேரம் நீடித்து நின்று கனமழைகொடுக்கும்..இது தவிர பாதிக்கும் மழை இருக்காது. ஆந்திரா  தெலங்கானா மக்கள் அச்சப்பட வேண்டாம்.

ஒடிசாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே கன மிக கனமழை வாய்ப்புள்ளது. செப்டம்பர் 9 இரவு, 10 அதிகாலை, காலை தலைநகரம் புவனேஸ்வர் உட்பட பூரி, ஜெகசிங்ப்பூர், கேந்த்ரப்பாரா, பாட்ராக், பாலாசூர்,கட்டக் மாவட்டங்கள் மிக கன, அதிகன மழை வாய்ப்பு உள்ளது.

யாகி புயலின் செயலிழந்த பகுதியும், வங்கக்கடல் தாழ்வும் மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் பகுதியில் ஒன்றிணைந்து உத்திரபிரதேசம் மத்திய பிரதேசம் கனமழை, மிக கனமழை கொடுத்துக்கொண்டே டெல்லி, குவாலியர் பகுதியை செப்டம்பர் 17 அடைந்து செயலிழக்கும்.
அடுத்த நிகழ்வு :
செப்டம்பர் 18 முதல் 25 முடிய.
இதுவும் ஒடிசா முதல் டெல்லி வரை பயணிக்கும் என்றெ தெரிகிறது.

தமிழ்நாட்டில்  மழை & வெப்பம் எப்படி?
*
வெப்பம் :
*செப்டம்பர் 8 ஞாயிறு 
மதுரை, திருச்சி, தஞ்சாவூர் 99'F தொடும்.
செப்டம்பர் 9 திங்கள் 
பெரம்பலூர், திருச்சி 100'F தொடும்.
செப்டம்பர் 10 செவ்வாய் 
திருச்சி, மதுரை 100 'F தொடும்.
செப்டம்பர் 11 புதன் 
திருச்சி 102'F, தஞ்சாவூர் 100'F தொடும்.
செப்டம்பர் 12, 13 வியாழன்,வெள்ளி 
மதுரை, திருச்சி, தஞ்சாவூர் 102'F தொடும். 
செப்டம்பர் 14  முதல் செப்டம்பர் 20 முடிய 
இதே பகுதியில் 98'F 99'F இருக்கும்.
மழை வாய்ப்புகள்
*பெரிய அளவில் மழை வாய்ப்பு இல்லை.
*இன்று செப்டம்பர் 8 திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு புதுச்சேரி கடலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே மழை கூடுதல் வாய்ப்பு தெரிகிறது.
*செப்டம்பர் 8,9,10 தேதிகளில் வால்பாறை, நீலகிரி மேற்கு
*மிதமான மழை ஓரிரு முறை இருக்கும்.
*கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் தூறல், நனைக்கும் மழை இருக்கும்.
*புதுக்கோட்டை முதல் திருவள்ளூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை இருக்கும்.
*திருவள்ளூர் முதல் புதுச்சேரி வரை இடைப்பட்ட பகுதியில் சென்னை உட்பட மிதமான மழைக்கு கூடுதல் வாய்ப்பு.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான / மிதமான மழை வாய்ப்பு.

செப்டம்பர் 11 முதல் 25 முடிய 
இந்த காலத்தில்  ஒரு சில இடங்களில் மாலை இரவில் லேசான மழை வாய்ப்பு,.
குறிப்பிடும் படி பெரிய மழை தெரியவில்லை.

செப்டம்பர் 28,29,30 அக்டோபர் 1,2,3,4
தென் சீனக்கடல் நிகழ்வு  ஆந்திரா வந்து தமிழ்நாடு உட்பட தென் இந்தியாவிற்கு சிறப்பான மழை  தரும்.

அக்டோபர் 10,11,12,13  ஆந்திரா வரும் நிகழ்வு காரணமாக தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள்  நல்ல மழை தரும்.
அக்டோபர் 11,12 ஆயுதபூஜை விஜய தசமி மழை குழப்ப வானிலை தெரிகிறது.
2024 தென் மேற்கு பருவமழை அக்டோபர் 14 முடிவுக்கு வரும்.

கடல் வெப்பம் லா -நினா அமைப்பும் நெகடிவ் IOD அமைப்பும்
*
இந்தியப் பெருங்கடல் IOD அக்டோபர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.

பசிபிக்கடல்  அக்டோபர் முதல் லா-நினா அமைப்பை அடையும்.

ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 அக்டோபர் முதல் ஜனவரி முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.

காற்று திசை மாறும் காலம் :
அக்டோபர் 13 to 16
வடகிழக்கு பருவமழை.
அக் 17,18 இல் தொடங்கும்.

இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.

மழை  அமைவுகள் எதிர்பார்ப்பு :
மொத்தம் 8 அமைப்புகள் அமையும், வலுவான அமைவுகளும், சிறு நிகழ்வும் வலுவான மழை தரும் அமைப்பு. ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்வுகளும்  அமைய வாய்ப்பு.

சில நிகழ்வுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் மழை தரும்.
சில நிகழ்வுகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் அதிக மழை தரும்.
நிகழ்வு அமையும் அமைவிடத்தினை வைத்து இரு வேறு வகை தன்மை காற்றுகள் இணைந்து மழை தரும்.
ஏந்த நிகழ்வு எங்கே வரும், ஏந்த மாவட்டங்களுக்கு மழை தரும் என்பதை 20 நாள்களுக்கு முன்னர் 
ஓரளவு துல்லியமாகவும்,
10நாள்களுக்கு முன்னர் துல்லியமாக அறிவிக்கிறேன்.

அமைவு 1
அக்டோபர் 18 முதல் 25 முடிய தென் மாநிலங்கள் பரவலாக மிதமானது முதல் சற்று கனமழை வரை.

அமைவு 2
   அடுத்த நிகழ்வு உருவாகி அக்டோபர்8.8.2024 28 முதல் நவம்பர் 4 முடிய நல்ல மழை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி தெரிகிறது.
 அக்டோபர் 31 தீபாவளி நாள்களில் மழை தெரிகிறது.
 
அமைவு 3
நவம்பர் 7 முதல் நவம்பர் 14 வலுவான நிகழ்வுகள்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உட்பட நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது.
நவம்பர் 15, 16,17, 18 நல்ல மழை தெரிகிறது.

அமைவு 4
நவம்பர் 22,23,24,25,26 மீண்டும் வலுவான நிகழ்வுகள்  அனைத்து மாவட்டங்களில் அதிக மழை தெரிகிறது.

அமைவு 5
நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 முடிய வலுவான நிகழ்வுகள் நல்ல மழை தெரிகிறது.

அமைவு 6
டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23 முடிய மன்னார் வளைகுடா தென் தமிழ்நாடு வழி அரபிக்கடல் நிகழ்வு  நல்ல மழை.

அமைவு 7
டிசம்பர் 26 முதல் 31 இலங்கை, குமரிக் கடல் நிகழ்வு.

அமைவு 8
 ஜனவரி  முதல் வாரம் நிலநடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல்  குமரிக் கடல் நிகழ்வு தென் மாவட்ட மிதமான மழை வாய்ப்பு.

தினசரி அப்டேட்ஸ் வழங்கப்படும் மாறுதல், துல்லியம் அறிந்து பணிசெய்து லாபம் அடைய கேட்டுக்கொள்கிறேன்.





ந. செல்வகுமார்
8.9.2024-4AM
வெளியீடு

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog