1.3.2024-4AM செல்வகுமார் வானிலை & விண்வெளி அறிக்கை.

0

1.3.2024-4AM செல்வகுமார் வானிலை & விண்வெளி அறிக்கை.




முன்னறிவிப்பு :

தமிழ்நாடு : கடலோரம் உயரழுத்த காற்று நுழைவு  காரணமாக கடலோரம்
அதிகபட்ச வெப்பம் சற்று குறைந்தும் உள்ளே மேற்கே வெப்பம்
 உயர்ந்து காணப்படும்.

சமவெளி பகுதி இரவு நேரகுறைந்தபட்ச வெப்பம் நாமக்கல்
மாவட்டத்தில் மிகவும் குறைந்து காணப்படும்.
மழை வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

மார்ச் 15 தேதிக்கு மேல் தென் மாவட்டங்களில் தொடங்கி
படிப்படியாக  மெல்ல பரப்பில் அதிகரிக்கும். ஏப்ரல் 15 க்கு மேல் 
மே  முடிய கோடை மழை தமிழ்நாட்டில் கூடுதல் பரப்பில் இருக்கும்.

வெயிலும் சராசரிக்கு கூடுதல் இருக்கும்.மழையும் ஆங்காங்கே ஆங்காங்கே
ஒதுக்கி ஒதுக்கி கூடுதல்  இருக்கும்.வெயில் அனைவருக்கும் கூடுதல் கொடுக்கும்.
பிற அனைத்து மாநிலங்கள் :மேற்கத்திய இடையூறு  காஷ்மீர் வருகை.
 
 பிப்ரவரி 29 மார்ச் 1,2,3 காஷ்மீர்,லடாக்,பஞ்சாப்,
  இமாச்சலபிரதேசம், சண்டிகர், உத்தரகாண்ட் மாநிலங்களில் காற்றுடன்
  ஐஸ் மழை, குளிர் நீர் மழை,பனி சரிவு ஏற்படும் வாய்ப்பு.
  
மார்ச் 2,3 இல் உத்திரப்பிரதேசம் டெல்லி, வடக்கு ராஜஸ்தான்
இடிமழை வாய்ப்பு.

  மார்ச் 1,2,3,4இமயமலையில் ஐஸ் மழை ஒரு சில இடங்களில்
 பனிச்சரிவுஏற்பட வாய்ப்பு.
 

  ============

01.03.24 இன்று  தமிழ்நாட்டின் கிழக்கு ஓரம் மேற்கு ஓரம் 
சூரியன் உதயம் மறைவு நேர விபரம்.

கிழக்கு ஓரம் பழவேற்காடு ↑ 06:26AM ↓ 06:17 PM
சென்னை  ↑ 06:25AM ↓ 06:17PM
ஊட்டி  ↑ 06:39AM ↓ 06:32 PM
மேற்கு ஓரம் எருமாடு (நீலகிரி மேற்கு ஓரம் ) ↑ 06:41 AM ↓ 06:35PM

தமிழ்நாட்டின் கிழக்கு ஓரத்திற்கும்
மேற்கு ஓரத்திற்கும் சூரியன் உதிப்பதில் நேர வேறுபாடு 15 நிமிடங்கள்.
================
மன்னார்குடியில்  சூரியன், சந்திரன்
இன்றைய பகல் நேரம்.06:27AM– 06:22PM
நண்பகல் நேரம் உச்சிக்கு சூரியன் வருதல்
12.24மணி.

11 மணிகள் 54 நிமிடங்கள் 59 வினாடிகள் 
உதயம் 98°கிழக்கு கி தெ கிழக்கு.மறைவு 262°
மேற்கு மே தெ மேற்கு.

இன்று 01.03.24 பூமி -சூரியன்
இடைப்பட்ட தூரம்:148.237மில்லியன் கிலோமீட்டர்.
============================


இன்றைய பகல் பொழுது
 குறித்த விளக்கம்.

இன்றைய துல்லிய பகல் நேரம்11 மணிகள் 54 நிமிடங்கள் 59 வினாடிகள்
(29 Feb 2024).

இரவு பொழுது 12 மணிகள் 5 நிமிடங்கள் 1 வினாடிகள்

இன்றைய (1 march 2024) பகல் பொழுது  நேற்று (29 Feb 2024) விட
 34 வினாடிகள் பகல் பொழுது கூடுதல்.
 நிலநடுக்கோட்டில்இருந்த (22 Dec 2023)விட இன்று 
24 நிமிடங்கள் 47 வினாடிகள்  பகல் பொழுது கூடுதல் .

 கடகரேகையில் இருந்த (21 Jun 2023) விட இன்று 
 49 நிமிடங்கள் 56 வினாடிகள் பகல் பொழுது குறைவு.
===========================

சந்திரன் மன்னார்குடியில் இன்று சந்திரன் உதயம் நேரம்
10.52 PM 100 டிகிரிகிழக்கு

இன்று சந்திரன் மறையும் நேரம்காலை 9.58 மணி 263 டிகிரிமேற்கு 

 இன்று 75%அளவிற்கு ஒளி வீசும்.

 
நேற்று  29.02.2024 சந்திரன் பூமி இடையே தூரம்
 4,02,295 கிலோமீட்டர்.

இன்று 1.3.2024 சந்திரன் பூமி இடையே தூரம்
3,99,157 கிலோமீட்டர்.
நேற்று  சந்திரன் இருந்த தூரத்தை விட இன்று
3,138 கிமீ குறைவு 

அடுத்து அமாவாசை நேரம்  மார்ச் 10-  2024,
 மதியம் 02.30 மணி.
 
அடுத்த முழுநிலவு பௌர்ணமி நேரம்.
மார்ச் 25- 2024, மதியம் 12.30 மணி.
=====================

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog