09.02.2024 தமிழ்நாடு காலை வானிலை ஆய்வறிக்கை-Tamilnadu morning Weather Fo...

0


செட்டிங்செட்டாகிறதுபிப்ரவரி 13,14 மழை உறுதி எங்கெங்கே? வாய்ப்பு எங்கெங்கே?






9.2.2024 -4AM செல்வகுமார் அறிக்கை.

மன்னார்குடியில் 
தற்போது வெப்பநிலை 
23 °C
பனிப்பொழிவு.
குளிர்.

இன்றைய நாள் 
வெப்பம் எதிர்பார்ப்பு
அதிகபட்சம் 34 'C
குறைந்த பட்சம் 23°C

இப்போது4AM
காற்றின் வேகம் 
மிகவும் குறைந்த வேகம்
வடக்கிலிருந்து
மணிக்கு 4 கிலோமீட்டர்  

தகவல் பதிவு நேரம் :
9பிப்ரவரி 2024- 04.00 AM

கண் பார்வை
தெரிவுநிலை 3 கி மீ.

காற்றில் அழுத்தம்
 1013 மில்லிபார்.

காற்றில் ஈரப்பதம் 94%


=======================
சூரியன், சந்திரன்

இன்றைய பகல் நேரம்.
06:34AM– 06:18PM
11 மணிகள்
44நிமிடங்கள்
12 வினாடிகள் 

நேற்று பூமி -சூரியன்
இடைப்பட்ட தூரம்:
1,47,550 மில்லியன்
கிலோமீட்டர்.

இன்று பூமி -சூரியன்
இடைப்பட்ட தூரம்:
1,47,578 மில்லியன்
கிலோமீட்டர்.


மன்னார்குடியில்
இன்று சூரியன் உதயம்
காலை 06:34 மணி 
105° கிழக்கு கி தெ கிழக்கு.

சூரியன் மறைவு
மாலை 06:18 மணி
  255° மேற்கு மே தெ மேற்கு.
============================


இன்றைய பகல் பொழுது
 குறித்த விளக்கம்.

இன்றைய துல்லிய
பகல் நேரம்
11மணிகள்
44நிமிடங்கள்
12வினாடிகள்
(9 Feb 2024).

இன்றைய பகல் பொழுது 
 நேற்று (8 Feb 2024) விட
 29 வினாடிகள்
 பகல் பொழுது கூடுதல்.

 நிலநடுக்கோட்டில்
இருந்த (22 Dec 2023)விட
14நிமிடங்கள் 
பகல் பொழுது கூடுதல் .

 கடகரேகையில்
 இருந்த (21 Jun 2023) விட
 1 மணி நேரம் 
பகல் பொழுது குறைவு.
===========================

மன்னார்குடியில்
இன்று சந்திரன் 
உதயம் நேரம்
05.57 AM 114 டிகிரி
கிழக்கு தென் கிழக்கு.

இன்று சந்திரன்
மறையும் நேரம்
05.49 PM 249 டிகிரி
மேற்கு தென் மேற்கு.


இன்று சந்திரன்
மாலை 5.49 மணி வரை
தெரியும் அளவு 1 %
சந்திரன் மெல்லிய
கோடு போல
 சந்திரன் அளவில்
 ஒரு சதவிகிதம்
 இருக்கும்.
 
 உதிக்கும் நேரம்
 சந்திரன் 5.57
 சூரியன் 
 
நேற்று சந்திரன் பூமி
 இடையே தூரம்
  3,65,620 கிலோமீட்டர்.

இன்று சந்திரன் பூமி
இடையே தூரம்
3,61,028 கிலோமீட்டர்.

மன்னார்குடியில் இருந்து
நேற்று சந்திரன் இருந்த
தூரத்தை விட
4,592 கிமீ குறைவு.

அடுத்து அமாவாசை நேரம் 
பிப்ரவரி 10-  2024,
 அதிகாலை 04:29 மணி.
 
 இன்று அமாவாசை 
என்று நாள் காட்டிகளில்
இருந்தாலும்
 நாளை அதிகாலை தான்
 அந்த 1 சதவிகிதமும்
 தெரியாதப்படி
 நேர்கோட்டில் வருகிறது.
 
அடுத்த முழுநிலவு
பௌர்ணமி நேரம்.
பிப்ரவரி 24 - 2024,
 மாலை 6:00 மணி.
=====================


9.2.2024 வெள்ளிக்கிழமை 

சூரியக்குடும்பம் தகவல்.

மன்னார்குடியில்
சூரியன்
உதயம் 6.34AM
மறைவு 6.18 PM
உச்சி நேரம்
மதியம் 12.26 மணி
180 டிகிரி தெற்கு.

மன்னார்குடி பகுதியில்
 இருந்து பார்த்தால்
தெரியும் கோள்கள்
மற்றும் நேரம் :

 புதன் கோள்
உதயம் 05:46 AM
மறைவு 05:20 PM
உச்சி  11:33 AM
கருத்து விளக்கம்:
பார்க்க சற்று கடினம்.
சூரியன் உதிக்கும் நேரம்
காலை 6.34 க்கு முன்
கடும் முயற்சி செய்து
கிழக்கே உதிக்கும் போது
 பார்க்கலாம்.
ஆனால் பார்ப்பது கடினம்.

வெள்ளி
 உதயம் 04:41 AM
மறைவு 04:12 PM
 உச்சி 10:26 AM
குறிப்பு :
4.39  AM முதல் 
சூரியன் உதிக்கும் நேரம்
6.34 வரை அதிகாலை கிழக்கே 
நன்றாக தெளிவாக பார்க்கலாம்.
பிறகு சூரியஒளி வந்துவிடும்
 என்பதால் பார்க்க முடியாது.

செவ்வாய் 
உதயம் 05:08AM
மறைவு 4:38PM
உச்சி 10:53AM 
பார்ப்பது கடினம்.
சூரியன் உதிக்கும் நேரம்
 காலை 6.34 க்கு முன்
  கடும் முயற்சி செய்து
  கிழக்கே உதிக்கும்
போது பார்க்கலாம்.
பார்ப்பது சற்று கடினம்.

வியாழன்
உதயம் 11:12  AM
மறைவு 11:35 PM
உச்சம் 05:24  PM

சூரியன் மறைந்த பிறகு
மாலை 6.18 முதல்
வியாழன் மறையும் நேரம்
இரவு 11.35 வரை
பார்க்க நன்றாக இருக்கும்.

சனி 
உதயம் 07:45AM
மறைவு 7:32 PM
உச்சி 01:38 PM
பகல் நேரம் என்பதால்
 பார்க்க முடியாது..

யுரேனஸ்
உதயம் 11:52 AM

மறைவு பிப்8
 நள்ளிரவை  கடந்து
பிப் 10 - 00:21 AM.

உச்சி 06:06PM
பார்ப்பது கடினம்.

நெப்டியூன் 
உதயம் 08:48 AM
மறைவு 08:46 PM
உச்சி 02:47 PM
பார்ப்பது மிகவும் கடினம்.

பூமி நாம் வாழ்வது.
அறிந்ததே.

ந.செல்வகுமார்
9.2.2024-4AM
 வெளியீடு

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog