விடிய விடிய வடமாவட்டங்களில் மழை. பருவமழை தீவிரம். இடிமழை தொடக்கம். இன்றும் வரும் நாள்களும் எப்படி?

0
2023 ஜூலை 23 ஞாயிறு அதிகாலை ஆய்வறிக்கை



 தென்மேற்கு பருவமழை ஆந்திர பிரதேசத்தின் வடக்கு பகுதி, ஒட்டுமொத்த தெலுங்கானா, ஒடிசா,சட்டீஸ்கர், மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களை மையமாக வைத்து சுழற்சி  அதீத கனமழை பொழிவு வரையும் கடலோர பகுதிகள் கேரளாவின் கடலோரப் பகுதிகள் தென்மேற்கு பருவமழை சற்று வலுப்பெறும்.
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கணவாய் பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை சாரல் மழையாக பொழியும்.

இனிமேல் தென்மேற்கு பருவமழையில் பெரிய இடைவெளி அமையாது.
அரை நாள் அல்லது சில மணி நேரங்களில் மட்டுமே தென்மேற்கு பருவமழை இடைவெளி அமையும்.

தமிழ்நாட்டிலும் ஜூலை 22 முதல்
ஈரக்காற்று நுழைய தொடங்கியதால்  மாலை இரவு வெப்ப சலனம் மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழையுடன் இணைந்து ஆங்காங்கே பொழிகிறது.
கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் தொடங்கிய மழை திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை மாவட்டங்களில் விடிய விடிய மழை பொழிவை கொடுத்தது.

விடிந்தும் வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்ளிட்ட வடகடலோரம் காலையும் தூறல் தொடரும்.
தென் மாவட்டங்களிலும் கேரள எல்லையோரம் மாவட்டங்களிலும் கர்நாடக எல்லையோர மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோரம் மாவட்டங்களிலும் வட உள் மாவட்டங்களிலும் மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவு சாரல் மழை இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில்
 குறைவான பரப்பில் ஒரு சில நாட்கள் மழை இருக்கும்.
ஜூலை 23  வடக்கு டெல்டா மேற்கு டெல்டாவில் மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே இடி மழை பொழிவு இருக்கும்.
ஜூலை 24 25 டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கும் மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெய்யாது .
ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவில் பொழியும்.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் நள்ளிரவு அதிகாலை நேரங்களில்
ஜூலை 24 25 தேதிகளில் லேசான மழை எதிர்பார்க்கலாம்.


மேலும் ஜூலை 25,26,27 இல் ஒரு நிகழ்வு காத்திருக்கிறது.
இந்த நிகழ்வு மீண்டும் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகாவின் வட கிழக்கு பகுதிகள் மகாராஷ்டிராவில் உள்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகள் அதிக மழை பொழிவை கொடுக்கும்.

அந்த சுற்று கூடுதல் தென்மேற்கு பருவமழையை கேரளா கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கும் கொடுக்கும்.

ஜூலை இறுதி நிகழ்வு ஒடிசாவின் வடக்கு பகுதியில் அமையலாம். அந்த ஒரு நிகழ்வு மழை பொழிவை கேரளா கர்நாடகாவில் அந்த ஓரிரு நாள்களில் மட்டும் குறைக்கலாம்.
மழை தொடரும்.
ஆகஸ்ட் சிறந்த மழை கொடுக்கும்.
ஆகஸ்ட் 15 க்கு மேல் அக்டோபர் 20 வரை தெற்கு பருவமழையும் தமிழ்நாட்டில் காற்று சுழற்சி வெப்பச்சலன மழையும் சிறப்பாக அமையும்.

மேட்டூர் மட்டம் இறங்கு முகத்தில் இருந்தாலும் மேட்டூரில் இருப்பு 15 டிஎம்சி  குறையும் முன்பே கர்நாடகா நீர் கிடைக்கும் வகையில் கர்நாடகாவில் மழைப்பொழிவு அமையும்.

கர்நாடக அணைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தின் பின் பகுதியில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

செப்டம்பர் அக்டோபர் உபரி நீர் கொடுக்கும் வகையில் மழை இருக்கும்.

தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20 வரை தொடர வாய்ப்பு உள்ளது.
 படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.


விடிய விடிய வடமாவட்டங்களில் மழை.பருவமழை தீவிரம்.இடிமழை  தொடக்கம்.இன்றும் வரும் நாள்களும் எப்படி?



காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் வானிலை எப்படி?
மேட்டூர் நிரம்புவது எப்போது? பாசன பகுதிகள் மழை எப்படி?


கணவாய் பகுதிகள்,காற்று பகுதிகள் 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்,வானிலை எப்படி?
23.7.23-4AM புதுப்பித்தது


இந்திய வானிலை:-மழை கொட்டபோவது
 எங்கே? பாதிப்பு எச்சரிக்கை எங்கெங்கே?





2023 July 23 Sunday Morning Thesis



South West Monsoon will be concentrated in the northern part of Andhra Pradesh, entire Telangana, Odisha, Chhattisgarh, Maharashtra, Gujarat and coastal areas with heavy rainfall and coastal areas of Kerala.

The Western Ghats and pass areas of Tamil Nadu will also receive light rainfall from the Southwest Monsoon.

Henceforth there will be no major gap in the southwest monsoon.
Southwest Monsoon breaks only for half a day or a few hours.

In Tamil Nadu also from July 22
As moist air starts to move in, evening night heat wave will give scattered showers along with southwest monsoon.

The rain which started in Krishnagiri Dharmapuri districts gave rise to Tirupattur Vellore Ranipet Chennai Tiruvallur Kanchipuram Chengalpattu Thiruvannamalai districts.

Rain is likely to continue in Vellore Tiruvannamalai districts at dawn.
The north coast including Chennai will continue to rain in the morning.

Scattered evening and night light rain will occur over southern districts, Kerala border districts, Karnataka border districts, Andhra border districts, North interior districts and Central interior districts.

A few days of rain will occur over lesser areas in Delta districts.
July 23 North Delta West Delta will have scattered thunderstorms in the evening and night.

July 24 25 Delta and southern districts are also expected to experience rainfall.
It will not rain in all districts at the same time.

Scattered showers in the evening and night.

Vedaranyam, Thalaignai areas during midnight and early hours
On 24th 25th July
Light rain is expected.


And an event awaits on July 25,26,27.
This event will again give heavy rainfall over Andhra Pradesh, Telangana, Karnataka, North-Eastern parts of Maharashtra, inland and coastal areas.

The cycle will bring additional southwest monsoon to Kerala, Karnataka and Western Ghats of Tamil Nadu.

The end of July event is likely to take place over the northern part of Odisha. That one event can reduce rainfall in Kerala Karnataka only for those couple of days.
Rain will continue.

August gives the best rainfall.

From August 15 to October 20, South Monsoon and convective rains will prevail over Tamil Nadu.

Even though the Mettur level is on the decline, the rainfall in Karnataka will make Karnataka water available before the storage in Mettur falls by 15 TMC.

The chances of Karnataka dams reaching full capacity in the latter part of the first week of August are looking bright.

September October rains will provide surplus water.

Southwest Monsoon is likely to continue till October 20.

  Patience Patience Patience Gradually the confusion will disappear and clarity will emerge.



Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog