டெல்டா உட்பட பல மாவட்டங்களில் கொட்டிய மழை. வரும் நாள்கள் எங்கெங்கே?

0

2023 ஜூன் 6 செவ்வாய் அதிகாலை ஆய்வறிக்கை


வடமேற்கு திசையில் இருந்து வெப்பத்தால் லேசாகி மேலெழுந்து வரக்கூடிய நீராவி காற்றை குளிர்விக்கும் விதமாக அரபிக்கடல் காற்று  காரணமாக கேரளா கர்நாடகா ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் தொடங்கி அனைத்து உள் மாவட்டங்கள் மற்றும் வங்க கடலோர மாவட்டங்களில் உள்பகுதி வரை மழை பொழிவு ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே  கிடைக்கும்.

மேற்கு மாவட்டங்களுக்கும் கர்நாடகா ஆந்திரா எல்லையோர மாவட்டங்களுக்கும் அனைத்து உள்8 மாவட்டங்களில் ஆங்காங்கே  தினசரி மழை பெய்யும்.

* தெற்கு காற்று மியான்மர் வங்கதேசம் நோக்கி திரும்பி இருக்கிற காரணத்தால் கடலோரத்தில் வலு குறைந்தும், மேற்கு காற்று வடமேற்கு காற்று வலு சற்று கூடி உள்ளது.இதன் காரணமாக இனி கடலோரமும் ஆங்காங்கே மழை இருக்கும்.*
 டெல்டா உள் பகுதி உட்பட ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை கிடைக்கும்.


வட கடலோரம் ஆங்காங்கே கூடுதல் இடங்களில்   நல்லமழை காற்றுடன் பொழியும்.
 

*ஜூன் 9 10 11 தேதிகளில் கடலோரமும் நல்ல மழை பொழிவு கிடைக்கும், அந்த நாள்களில் கூடுதல் பரப்பில் மழை கிடைக்கும்.

தென்மேற்கு பருவமழையை தொடக்கும் நிகழ்வு லட்சத்தீவிற்கு மேற்கே உருவான காரணத்தால் பருவமழை தொடங்குவது தாமதம் ஏற்படுகிறது. அரபிக் கடல் நிகழ்வு புயலாகி விட்டம் பெரிதாகும் பொழுது தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும்.
பருவமழை தொடங்கினாலும் பெயரளவில் பருவமழை தொடரும்.

கடற்காற்று முற்பகலில் நுழையாமல்
 வெப்பம் உயர செய்கிறது.

வங்கக் கடலோர மாவட்டங்கள்  உட்பட கடும் வெப்பம், புழுக்கம் நிலவும்.

C'-F'
38-100.4
39-102.2
40-104
41-105.8

அனைத்து மாவட்டங்களிலும் 100'F டிகிரிக்கு மேல் வெப்பம் உயர்ந்திருக்கும்.
மேற்கு மாவட்டங்களிலும் கேரளா கர்நாடகா விலும் வெப்பம் உயரும்.அங்கும் 98'F க்கு மேல் வெப்பம் உயரும்.

 தென் மேற்கு பருவ மழை தொடங்கும் வரை வெயில் வெப்பம் புழுக்கம் தொடரும் அதே நேரத்தில்  கர்நாடகா எல்லை ஓரம் கேரளா தொடங்கி படிப்படியாக அடுத்தடுத்த மணி நேரங்களில் மாலை இரவு வெப்பச்சலன இடிமழை கிழக்கு பகுதி நோக்கி முன்னேறும்.


 வெயிலுக்கு பின்னர் மேற்கு மாவட்டங்கள், அனைத்து உள்மாவட்டங்கள் மதியம் மாலை இரவு ஆங்காங்கே இடிமழை கிடைக்கும்.

 ஜூன் 16 வரை இதே வெப்பம் தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது.

*ஜூன் 5 தேதி நேற்று அரபிக்கடலில் உருவான தாழ்வு பகுதி  மண்டலம், புயல், தீவிர புயல் என்ற தீவிரம் அடைந்து ஜூன் 8,9,10,11,12,13,14,15 இல் விலகி செல்லும்.

அதே தேதியில் வடக்கு வங்கக்கடலிலும்  தாழ்வு உருவாகி தீவிர நிகழ்வாக 
அரபிக்கடல் காற்றை கேரளா தமிழ்நாடு வழியாக வங்க கடலுக்கு ஈர்த்து பருவம் அடையை பருவமழை பெயரளவில் கொடுக்கும்.
தமிழ்நாட்டில் வெப்பச்சலன மழை தொடரும். ஜூன் 9 க்கு மேல் தீவிரம் அடையும்.

எல் நினோ அச்சம் வேண்டாம்
பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் என்று பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி3 செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது. எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.எல்-நினோ கவலை வேண்டாம்.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.
பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.
வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
6.6.2023-4AM வெளியீடு

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog