பரவலாகும் இடி மின்னல் மழை.இன்று எங்கெங்கே? உங்களுக்கு எப்போது?

0
பரவலாகும் வெப்பச்சலன கோடை காற்று,இடி மின்னல் மழை மற்றும் ஆலங்கட்டி மழை இன்று எங்கெங்கே?
உங்களுக்கு எப்போது அறிக்கை.

2023 மார்ச் 18 சனிக்கிழமை  அதிகாலை ஆய்வறிக்கை


நேற்று அமைந்தது
நேற்று மார்ச் 17 சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி கள்ளக்குறிச்சி சேலம் நாமக்கல் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை பொழிந்தது. சென்னையில் 6 சென்டிமீட்டருக்கு மேல் மழை பொழிந்திருக்கிறது.
மார்ச் 18 சனிக்கிழமை வானிலை
இன்று சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி கள்ளக்குறிச்சி விழுப்புரம் புதுச்சேரி கடலூர் பெரம்பலூர் சேலம் நாமக்கல் ஈரோடு நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மதுரை தேனி விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை பொழிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
 சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சற்று கனமழை முதல் கனமழை வரை ஒதுக்கி ஒதுக்கி அங்கங்கே பொழியும்.

மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் காரைக்கால் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே இடி மழை இருக்கும்.
மார்ச் 19 20 21 வானிலை
மார்ச் 18 முடிய டெல்டா  மாவட்டங்களில் குறைவான பரப்பில் மழை பொழிந்தாலும், மார்ச் 19, 20 ,21 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் பரப்பில்  கண்டிப்பாக ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி இடி மின்னல்  மழை இருக்கும்.
மார்ச் 24 க்கு பிறகு வெப்பச் சலன மழை சற்று தீவிரம் குறைந்து மீண்டும் மாத இறுதியிலிருந்து தீவிரமடையும்.
ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog