இன்று இடி மின்னல் மழை எங்கே? வரும் நாள்கள் எங்கெங்கே?

0

2023 மார்ச் 15 புதன் இரவு  ஆய்வறிக்கை




எதிர்பார்த்தது போல மார்ச் 15 கிழக்கு காற்று வேகம் குறைந்தது.  புழுக்கம் அதிகரித்தது. வெப்பச்சலன மழை  கேரள எல்லையோர மாவட்டங்கள்  ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி தொடங்கியது. வால்பாறையில் சில மணி நேரம் மழை. நீலகிரியில் ஆங்காங்கே மழை.
 இந்த வெப்பச்சலன இடி மின்னல் மழை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் தொடங்கும்.கடும் புழுக்கம், வியர்வை வெளிவரும் வானிலை நிலவும். மதியம் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடி மின்னல் மழை தொடங்கி, உள் மாவட்டங்களில் மெல்ல பரவி ஆங்காங்கே ஆங்காங்கே மாலை நேரத்தில் இடி மின்னல் மழை பெய்யும் பிறகு படிப்படியாக இரவில் கடலோரம் இடி மின்னல் மழை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி இருக்கும் .தவிர பரவலாக இருக்காது அருகருகே பொழியும். ஒதுக்கி ஒதுக்கி பொழியும் பொழுது உங்களுக்கும் ஒரு நாள் பொழியும்.
மார்ச் 17 18 19 தேதிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழைப்பொழிவு தெரிகிறது. ஒரு சில இடங்களில் கன மழைப்பொழிவு இருக்கும்.
டெல்டா மாவட்டங்களில் மார்ச் 17 இரவு 18 அதிகாலை கண்டிப்பாக ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி இடி மின்னல்  மழை இருக்கும்.
மார்ச் 24 க்கு பிறகு வெப்பச் சலன மழை சற்று தீவிரம் குறைந்து மீண்டும் மாத இறுதியிலிருந்து தீவிரமடையும்.
ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.


ந. செல்வகுமார்.
15.3.2023-4AM வெளியீடு.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog