2023 மார்ச் 15 க்கு மேல் அதிகரிக்கும் வெயில் .மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே வெப்பச்சலனஇடி மழை தொடங்கும், படிப்படியாக அடுத்தடுத்த நாள்களில் பரப்பில் அதிகரிக்கும்
2023 மார்ச் 11 சனிக்கிழமை இரவு ஆய்வறிக்கை
மார்ச்11,12,13,14 வானிலை
தென் தமிழ்நாட்டில வெயிலுக்கு இடையே வானம் மேகம் சூழ்ந்து காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.
மார்ச் 15 க்கு மேல் வானிலை
மார்ச் 15க்கு மேல் கிழக்கு காற்று வேகம் குறையும். வெயில் அதிகரிக்கும் வெப்பச்சலன மழை கேரள எல்லையோர மாவட்டங்கள் கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி தொடங்கும் . வெப்பச்சலன இடி மழை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் கடும் வெயில் வாட்டும் நிலையில் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவில் இடி மழை இருக்கும் .தவிர பரவலாக இருக்காது அருகருகே பொழியும். ஒதுக்கி ஒதுக்கி பொழியும் பொழுது உங்களுக்கும் ஒரு நாள் பொழியும்.
மார்ச் 17 18 19 தேதிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழைப்பொழிவு தெரிகிறது. ஒரு சில இடங்களில் கன மழைப்பொழிவு இருக்கும்.
மார்ச் 24 க்கு பிறகு வெப்பச் சலன மழை சற்று தீவிரம் குறைந்து மீண்டும் மாத இறுதியிலிருந்து தீவிரமடையும்.
ஏப்ரல் மே கோடை மழை
ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.