வெப்பச்சலன இடி மின்னல் மழை இன்று எங்கெங்கே? உங்களுக்கு எப்போது?

0
வெப்பச்சலன கோடை காற்று,இடி மின்னல் மழை மற்றும் ஆலங்கட்டி மழை இன்று எங்கெங்கே?உங்களுக்கு எப்போது அறிக்கை.
2023 மார்ச் 17 வெள்ளி அதிகாலை ஆய்வறிக்கை


நேற்று அமைந்தது
கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ,இராமநாதபுரம் ,தேனி, மதுரை ,திண்டுக்கல் ,திருப்பூர் ,கோயம்புத்தூர், நீலகிரி ,கரூர், ஈரோடு ,நாமக்கல் ,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ,திருப்பத்தூர் திருவண்ணாமலை ,திருச்சி ,ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிந்தது.
மார்ச் 17 வெள்ளி வானிலை

கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி விருதுநகர் இராமநாதபுரம் தேனி மதுரை திண்டுக்கல் திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி கரூர் ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருவண்ணாமலை திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் திருவள்ளூர் மேற்கு அரை பகுதி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கு ஓரம், கடலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதி, விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதி, தஞ்சாவூர் மாவட்டத்தின் அரியலூர் திருச்சி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் எல்லை பகுதி புதுக்கோட்டை மாவட்டத்தின் உள்பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி  மதியம் மாலை இரவு நள்ளிரவு அதிகாலை நேரங்களில் மழை பொழியும்.
தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் கர்நாடக எல்லையோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மாலை இரவு கனமழை உறுதி.
கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய வட உள் ஆலங்கட்டி மழை ஆங்காங்கே கரை காற்றுடன் இடி மின்னலுடன் இருக்கும்.
மார்ச் 18 19 20 தேதிகளில் டெல்டா உட்பட வட கடலோரம், தென் கடலோரம்  ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மழை உறுதி. ஒதுக்கிய இடங்களில் அடுத்தடுத்த நாட்களில் பொழியும். வந்தால் அரை மணி நேரம் பெய்யும் .

 இந்த வெப்பச்சலன இடி மின்னல் மழை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் தொடங்கும்.கடும் புழுக்கம், வியர்வை வெளிவரும் வானிலை நிலவும். மதியம் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடி மின்னல் மழை தொடங்கி, உள் மாவட்டங்களில் மெல்ல பரவி ஆங்காங்கே ஆங்காங்கே மாலை நேரத்தில் இடி மின்னல் மழை பெய்யும் பிறகு படிப்படியாக இரவில் கடலோரம் இடி மின்னல் மழை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி இருக்கும் .தவிர பரவலாக இருக்காது அருகருகே பொழியும். ஒதுக்கி ஒதுக்கி பொழியும் பொழுது உங்களுக்கும் ஒரு நாள் பொழியும்.
மார்ச்  18 19 ,20 தேதிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழைப்பொழிவு தெரிகிறது. ஒரு சில இடங்களில் கன மழைப்பொழிவு இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில்  மார்ச் 18 19 கண்டிப்பாக ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி இடி மின்னல்  மழை இருக்கும்.
மார்ச் 24 க்கு பிறகு வெப்பச் சலன மழை சற்று தீவிரம் குறைந்து மீண்டும் மாத இறுதியிலிருந்து தீவிரமடையும்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog