2023 மார்ச் 15 முதல் மாறும் வானிலை குறையும் காற்று கூடும் வெயில். தொடங்கும் இடிமழை. உங்களுக்கு எப்படி?

0

2023 மார்ச் 6 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை 

மார்ச் 6,7 வானிலை
தெளிவாக வானம்,கடும் வெயிலுக்கு இடையே டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மதியம் மட்டும் வானம் மேகம் சூழ்ந்து காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

மார்ச் 8,9,10 வானிலை
காற்று சுழற்சிகள் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு தெற்கே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மார்ச் 8,9,10 தேதிகளில் மதிய நேரம் மட்டும் கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி இராமநாதபுரம்  ஆகிய மாவட்டங்களின் கடலோர  பகுதிகளில் மட்டும் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி ஓரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு தெரிகிறது.
இராமநாதபுரம் வடக்கு ,புதுக்கோட்டை கடலோரம் தெற்கு டெல்டா கடலோரம் கடலோரம் தூறல் வாய்ப்பு தெரிகிறது. மார்ச் 8,9,10 மதிய நேரம் மட்டும் டெல்டா மற்றும் தென் தமிழ்நாடு பிற பகுதிகள் வேகம் சூழ்ந்து குழப்பமான வானிலை மட்டும் கொடுக்கும்.

மார்ச்11,12,13,14 வானிலை
தென் தமிழ்நாட்டில வெயிலுக்கு மதியம் இடையே வானம் மேகம் சூழ்ந்து காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

மார்ச் 15 க்கு மேல் வானிலை
மார்ச் 15க்கு மேல் கிழக்கு காற்று வேகம் குறையும். வெயில் அதிகரிக்கும் வெப்பச்சலன மழை  கேரள எல்லையோர மாவட்டங்கள் கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி தொடங்கும் . வெப்பச்சலன இடி மழை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் கடும் வெயில் வாட்டும் நிலையில் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவில் இடி மழை இருக்கும் தவிர பரவலாக இருக்காது அருகருகே பொழியும்.வெப்ப சலன இடி மழை மாலை இரவு நேரங்களில் வடகடலோரம் வட உள் மாவட்டங்களுக்கும் தென் கடலோரம் தென் உள் மாவட்டங்களுக்கும் மத்திய மாவட்டங்களுக்கும்  அடுத்தடுத்த நாள்களில் கிடைக்க வாய்ப்புண்டு.
ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

ந. செல்வகுமார்.
6.3.2023-4AM வெளியீடு.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog