காற்று சுழற்சி மழை,வரும் நாள்கள் எப்படி?

0

05.01.2023 வியாழன் இரவு 7 மணி ஆய்வறிக்கை.





காற்று சுழற்சி  மிகவும் மெல்ல நிலநடுக்கோட்டுப் பகுதியை ஒட்டி மேற்கு நோக்கி நகர்கிறது.

ஜனவரி 3 வேதாரண்யம் தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் ஆங்காங்கே மழை கொடுத்தது.

 ஜனவரி 4 சென்னை மாநகரில் ஆங்காங்கே ஆங்காங்கே நனைக்கும்  மழை கொடுத்தது. 
இன்று ஜனவரி 5 அதிகாலை புதுச்சேரி விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் மழை பொழிவை கொடுத்து.திருக்கோயிலூர் கிராமப்புற பகுதிகளில் கூட மழைப்பொழிவு கொடுத்தது.

இன்று காலை மதியம் மாலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி புதுச்சேரி கடலூர் திருவண்ணாமலை செங்கல்பட்டு தர்மபுரி சேலம் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே தூறல் நனைக்கும் மழையை பொழிவை கொடுத்தது.
சற்றுமுன் சென்னை தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மிதமான மழைப்பொழிவு வரை கொடுத்திருக்கிறது. சென்னை பொழிச்சலூர் பகுதிகளில் மிதமான மழைப்பொழிவை கொடுத்தது.

டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே தூறல் நனைக்கும் மழை கொடுத்த நிலையில் ஒட்டு மொத்தமாக மேகம் சூழ்ந்து காணப்பட்டது
 செம்போடை பகுதிகளில் தூறல் சாரல் கொடுத்தது.

இந்த காற்று சுழற்சி நிலநடுக்கோட்டு பகுதியில் மேற்கு நோக்கி நகருகிற காரணத்தால் ஜனவரி 5 முதல் கிழக்கு காற்று தமிழகத்தில் நுழைந்து ஜனவரி 5 முதல் குளிர் பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டத்துடன் வானிலையை உருவாக்கும்.
ஜனவரி 5 முதல் 9 முடிய இடைப்பட்ட நாள்களில் அவ்வப்பொழுது சில நிமிடங்கள் டெல்டா கடலோரம் (கடற்கரை ஓர கிராமங்கள் மட்டும் உறுதி) தென்கடலோரம் தூறல் நனைக்கும் மழையை கொடுப்பதற்கு வாய்ப்பு.

ஜனவரி 6 7உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் தூறல் நனைக்கும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

தென் சீனக்கடல் நிகழ்வு ஜனவரி 8,9 தேதிகளில் அந்தமான் கடற்பகுதிக்கு வந்து  ஜனவரி  11 12 13 ,14 தேதிகளில் இலங்கைக்கு மழை கொடுக்கும் வகையில் அமைந்து அவ்வப்பொழுது சில நிமிடங்கள் டெல்டா கடலோரம் (கடற்கரை ஓர கிராமங்கள் மட்டும் உறுதி) தென்கடலோரம் தூறல் நனைக்கும் மழையை கொடுப்பதற்கு வாய்ப்பு.
ஜனவரி 16 முதல் 24 வரை இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் தெற்கு பகுதிக்கு  நிகழ்வு வர வாய்ப்பு.

மேற்கண்ட நிகழ்வு  இலங்கை தெற்கு பகுதி வருவது உறுதி . அது  தமிழகத்திற்கு தூறல் மழை பொழிவை எந்த அளவிற்கு முன்னேறி கொடுக்கும்  என்பதை வரக்கூடிய நாள்களில் உறுதிப்படுத்தலாம்.

மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை
ஜனவரி 5 முதல் மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் எடை குறைந்த படகுகளுக்கு சவால் நிறைந்த காற்று இருக்கும்.
ஜனவரி 6 கண்டிப்பாக மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதியில் வலுவான காற்று இருக்கும்.
நம்முடைய துல்லிய வானிலை (அதிகாலை இரவு இரு நேரங்கள்) அறிக்கையை ஆண்டு முழுவதும் பார்த்து திட்டமிட்ட துல்லிய வேளாண்மை செய்து லாபம் அடையுங்கள்.

ந. செல்வகுமார்

Follow


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog