2023 ஜனவரி 11 அதிகாலை ஆய்வறிக்கை.
இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி மேலும் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.
தெற்கு அந்தமான்- சுமத்ரா இடைப்பட்ட கடற்பகுதியில் நீடிக்கும் தீவிரம் குறைந்த காற்று சுழற்சி மெல்ல தென்மேற்கு நோக்கி நகர்ந்து நிலநடுக்கோட்டுப் பகுதியை அடையும்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய விட இன்று கூடுதல் உறைபனி.
சில இடங்களில் வெப்பநிலை மைனஸ் 2 வரை
தொட்டது. ஆங்காங்கே குறைந்தபட்ச வெப்பநிலை -2'C,-1'C ,0'C +1'C,+2'C என்ற நிலை நீடிக்கிறது.
பிற மாவட்டங்களை நடுங்க வைக்கும் குளிர் காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 20 வரை உறைபனி காணப்படும்.
பிற மாவட்டங்களில் நடுங்கும் குளிர் ஜனவரி 20 வரை தொடரும்.
அடுத்தடுத்த நிகழ்வுகள்
அடுத்தடுத்து பசிபிக் பெருங்கடல் முதல் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் குமரிக்கடல் பகுதி வரை (பசிபிக் பெருங்கடல், தென் சீனக்கடல், தாய்லாந்து வளைகுடா, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ) நிகழ்வுகள் நீடிக்கின்ற காரணத்தினால் தென் அரைக்கோளம் நோக்கிச் செல்லும் வட துருவ குளிர் அலை பிரிக்கப்பட்டு தென் அரைக்கோளம் நோக்கி பயணிக்கிறது.
ஜனவரி அமைவுகள்
நிகழ்வு எண் 1 மற்றும் 2 நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து குளிர் மட்டும் கொடுக்கும்.
நிகழ்வு எண் 3 மற்றும் 4 ஜனவரி 22 23 24 மற்றும் ஜனவரி 27 28 29 30 தேதிகளில் மழை பொழிவை கொடுக்கும் வகையில் சாதக அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு தெரிகிறது.
நிகழ்வு எண் 2
ஜனவரி 12 13 14 15,16,17 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமையும்.
இதனால் கடலோர மாவட்டங்களில் குழப்பமான மேகமூட்டம் வானிலை .காணப்படும்.
இரவு அதிகாலை நடுங்க வைக்கும் குளிர் வானிலை காணப்படும்.
நீலகிரி உறைபனி வானிலையும் தொடரும்.
அதற்கு அடுத்த நிகழ்வு எண் 3
காற்று சுழற்சி ஜனவரி 18 முதல் 24 வரை இலங்கையை நெருங்கி, ஜனவரி 22 23 24 தேதிகளில் இலங்கைக்கு கனமழை கொடுத்து வட இலங்கைக்கு மிதமானது முதல் சற்று கனமழையை கொடுத்து ,தமிழகத்திற்கு கடலோர மாவட்டங்கள் தென் மாவட்டங்களுக்கு மழை பொழிவை கொடுக்க சாதக சூழல் தென்படுகிறது. உள் மாவட்டங்களிலும் மழை கொடுத்த வாய்ப்பு தெரிகிறது.
அதன் தீவிரத் தன்மை ஆய்வில் இருக்கிறது.
நிலநடுக்கோட்டு பகுதி நிகழ்வு மடகாஸ்கர் நோக்கி விலகி செல்லும் என்பதால், நிலநடுக்கோட்டு வெப்ப காற்று கிடைக்கப் பெற மழை வாய்ப்பு ஏற்படுத்தும் என்று தெரிகிறது. செட்டிங் செட் ஆவது எப்படி? ஆய்வு தொடர்கிறது.
ஜனவரி இறுதி வார நிகழ்வு
(ஜன 27,28,29,30)
ஜனவரி 25 26 தேதிகளில் வங்கக்கடலில் நிகழ்வு தீவிரமடைந்து இலங்கையை நெருங்கி வர வாய்ப்பு தெரிகிறது.
ஜனவரி 27 28 29 30 தேதிகளில் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தெரிகிறது.
அதன் நகர்வு தீவிரத் தன்மை ஆய்வில் உள்ளது.
அனைத்து நிகழ்வுகளுக்கும் இன்னும் நாட்கள் இருக்கின்றன. வரக்கூடிய நாட்களில் துல்லியம் தெரியவரும்.
எது எப்படியோ , பாதிக்கும் மழையாக இருக்காது.
அச்சமின்றி, இடைவெளி அறிந்து ,ஆறுவடை செய்க.
ந. செல்வகுமார்.