2023 ஜனவரி 14 அதிகாலை ஆய்வறிக்கை
தலைப்பு செய்தி
நீலகிரி மாவட்ட உறைபனி இன்று அதிகரித்து காணப்படுகிறது.
நீலகிரி உறைபனி ஜனவரி 18 வரை தொடரும்.
பிற மாவட்ட நடுங்க வைக்கும் குளிர் ஜனவரி 21 வரை தொடரும். ஜனவரி 19 முதல் கிழக்கு சாரல் காற்றுடன் குளிர் இருக்கும்.
2023 ஜனவரி 23 க்கு மேல் பிப்ரவரி 5 க்குள் மூன்று சுற்று மழை பொழிவு இருக்கிறது.
அது முதல் சுற்றாக ஜனவரி 23 24 25 தேதிகளில் இருக்கும். இரண்டாவது சுற்றாக ஜனவரி 27 க்கு மேல் ஜனவரி 31க்குள் இருக்கும். மூன்றாவது சுற்று பிப்ரவரி 1 முதல் 5க்குள் இருக்கும்.
மேற்கத்திய இடையூறு, இந்திய நிலப்பகுதி உயர் அழுத்தம்,வட இந்திய நிலப்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் காற்று சுழற்சி ,இவைகளுக்கு இடையே வெப்ப குளிர் காற்று சதவீதம் சரியாக அமைந்து தமிழகத்தின் கர்நாடக ஆந்திர கேரளா எல்லையோரம் வரை ஒரு சில நாள்கள் மழை பொழிவிற்கு சாதகம் தெரிகிறது.
கடலோரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு
ஜனவரி 23 முதல் உறுதியாக தெரிகிறது.
விளக்கம்
இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சியும்
தெற்கு அந்தமான்- சுமத்ரா இடைப்பட்ட கடற்பகுதி காற்று சுழற்சியும் இணைந்து நிலநடுக்கோட்டுப் பகுதியில் சற்று தீவிரமடைந்து நீடிக்கிறது.
வடதுருவக் குளிரலை வங்கக்கடல் வழியாகவும் அரபிக்கடல் வழியாகவும் நில நடுக்கோட்டு பகுதியை நோக்கி பயணிக்கிறது.
கடற்காற்று நிலப் பகுதியில் முழுமையாக ஏறவில்லை. பாக் நீரிணைப்பு, மன்னார் வளைகுடா வழியாக செல்லும் காற்று கடலோர பகுதியை மட்டும் தொட்டுச் செல்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய விட இன்று கூடுதலாகி உறைபனி நிலவுகிறது.
சில இடங்களில் வெப்பநிலை மைனஸ் 1 வரை
தொட்டது. ஆங்காங்கே குறைந்தபட்ச வெப்பநிலை -1'C ,0'C +1'C,+2'C என்ற நிலை நீடிக்கிறது.
பிற மாவட்டங்களை நடுங்க வைக்கும் குளிர் காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 18 வரை உறைபனி காணப்படும்.
பிற மாவட்டங்களில் நடுங்கும் குளிர் ஜனவரி 21 வரை தொடரும்.
அடுத்தடுத்த நிகழ்வுகள்
அடுத்தடுத்து பசிபிக் பெருங்கடல் முதல் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் குமரிக்கடல் பகுதி வரை (பசிபிக் பெருங்கடல், தென் சீனக்கடல், தாய்லாந்து வளைகுடா, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ) நிகழ்வுகள் நீடிக்கின்ற காரணத்தினால் தென் அரைக்கோளம் நோக்கிச் செல்லும் வட துருவ குளிர் அலை பிரிக்கப்பட்டு தென் அரைக்கோளம் நோக்கி பயணிக்கிறது.
ஜனவரி அமைவுகள்
நிகழ்வு எண் 1 மற்றும் 2 நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து குளிர் மட்டும் கொடுக்கும்.
நிகழ்வு எண் 3 ,4மற்றும் 5 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 5 வரை ஆங்காங்கே அவ்வப்போது மழை பொழிவை கொடுக்கும் வகையில் சாதக அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு தெரிகிறது.
அனைத்து நிகழ்வுகளுக்கும் இன்னும் நாட்கள் இருக்கின்றன. வரக்கூடிய நாட்களில் துல்லியம் தெரியவரும்.
ஜனவரி 22 க்கு மேல் பிப்ரவரி 5க்குள் கொடுக்கும் மழைப்பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே அமையும், கடலோரம் தென் மாவட்டங்கள் தென் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கூடுதல் வாய்ப்பு.
பாதிக்கும் மழையாக இருக்காது.
அச்சமின்றி, இடைவெளி அறிந்து ,ஆறுவடை செய்க.
ந. செல்வகுமார்.