ஜன 23 க்கு மேல் மாறி அமையும் வானிலை. மழை எப்போது

0

 2023 ஜனவரி 16 அதிகாலை ஆய்வறிக்கை




உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவோம்.
🙏 கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் இனிய மாட்டுப்பொங்கல் திருநாளில் வணங்கி மகிழ்கிறேன்.🙏


தலைப்பு செய்தி

நீலகிரி மாவட்ட உறைபனி சற்று குறைந்து கடும்  குளிர் காணப்படுகிறது.
நீலகிரி உறைபனி ஜனவரி 18 வரை தொடரும்.

பிற மாவட்ட நடுங்க வைக்கும் குளிர் ஜனவரி 21 வரை தொடரும். ஜனவரி 19 முதல் கிழக்கு சாரல் காற்றுடன் குளிர் இருக்கும்.

2023 ஜனவரி 23 க்கு மேல் பிப்ரவரி 10 க்குள் குளிர் ,பனிப்பொழிவு,மேகமூட்டம் ,தூறல் ,சாரல், ஆங்காங்கே மழை என்று மாறி மாறி வானிலை அமையும்..

மேற்கத்திய இடையூறு, இந்திய நிலப்பகுதி உயர் அழுத்தம்,வட இந்திய நிலப்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் காற்று சுழற்சி ,இவைகளுக்கு இடையே  வெப்ப குளிர் காற்று சதவீதம் சரியாக அமைந்து தமிழகத்தின் கர்நாடக ஆந்திர கேரளா எல்லையோரம் வரை ஒரு சில நாள்கள் மழை பொழிவிற்கு சாதகம் தெரிகிறது.

ஜனவரி 23 24 டெல்டா கடலோரம் தென்கடலோரம் நனைக்கும் மழை வாய்ப்பு.
ஜனவரி 25 26 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மழை பொழிவு அமைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

குடியரசு தினத்திற்கு முதல் நாள் கண்டிப்பாக கடலோரம் மிதமான மழைப்பொழிவு இருக்கும்.

ஜனவரி இறுதி வாரம் மற்றும் பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே அவ்வப்பொழுது மழைப்பொழிவு தெரிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து ஊர்களிலும் பெய்யாது அவ்வப்பொழுது ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே பொழியும். அறுவடை நேரத்தில் குழப்பும் வானிலை, தூறல் வானிலை, நனைக்கும் மழை வானிலை ,லேசான மிதமான மழை வானிலை, என்று அனைத்தும் பனிப்பொழிவிற்கு இடையே இருக்கும். பிப்ரவரி 15 வரை கூட இப்படி அமையலாம்.

பாதிக்கும் மழையாக இருக்காது. 
ஆனால் அறுவடை நாளை குறிப்பதில் குழப்பம் தொடர்ந்து நீடிக்கும். மழை பொழிவு தொடர்ந்து பெய்யாது. இந்நாட்களில் ஒரு சில நாட்கள் மழை குறிக்கீடு இருக்கும் .குழப்பம் அதிகம் இருக்கும்.
அச்சமின்றி, இடைவெளி அறிந்து ,ஆறுவடை செய்க.

ந. செல்வகுமார்.


Follow


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog