இலங்கை வரும் மண்டலம். பிப் 3 முடிய மழை எப்படி?

0

இலங்கை வரும் மண்டலம்.பிப் 3 முடியமழை எப்படி?


30.01.2023-6PM தமிழ்நாடு இரவு வானிலை ஆய்வறிக்கை




2023 ஜனவரி 30 திங்கள் அதிகாலை ஆய்வறிகை
 
இலங்கை நெருங்கும் தாழ்வு மண்டலம்

நன்கு அமைந்த தாழ்வு பகுதியாக அதிகாலை 4 மணி நிலவரப்படி இலங்கையின் முல்லைத்தீவிற்கு கிழக்கு தென்கிழக்கு 770 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
 இன்று தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் பிறகு மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து பிப் 1 இலங்கை முல்லைத்தீவு திரிகோணமலை கல்முனை இடைப்பட்ட பகுதி அருகே வந்தடையும்.
தொடங்கியது மழை
அதிகாலை மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கிய மழை தற்போது கடலூர் மாவட்டம் தொடங்கி வீராணம் காட்டுமன்னார்கோவில் முட்டம் பகுதி வரை முன்னேறி அரியலூர் மாவட்டம் நோக்கி முன்னேறுகிறது.
காரைக்கால் பகுதியில் தொடங்கிய மழை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கொல்லுமாங்குடி பகுதிக்கு முன்னேறுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செம்போடை புஷ்பவனம் பகுதியில் தொடங்கிய மழை திருக்குவளை தலைஞாயிறு பகுதிக்கு முன்னேறுகிறது.

மேலும் கரியாபட்டினம் நெய்விளக்கு மருதூர் ஆயக்காரன்புலம் மஞ்சநதிக்குளம் தகட்டூர் பகுதியில் அதிகாலை மழை பொழிந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கள்ளிக்குடி எடையூர் பகுதிக்கும் மழை முன்னேற்றம்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் தொடங்கிய மழை கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் வரை மழை பொழிகிறது.

சென்னையில் தொடங்கிய மழை உள்பகுதி வரைக்கும் முன்னேறி பொழிச்சலூரில் மிதமான மழையாக பொழிகிறது.

இப்படி படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று இரவுக்குள் மழை முன்னேறி தொடங்கும்.

ஜனவரி 30 31 பிப்ரவரி 1,2,3 வானிலை

வரும் 72 மணி நேரங்கள் வானம் மேகம் சூழ்ந்து குளிர் வானிலை நிலவும் இடையிடையே மழைப்பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி கொடுக்கும்.பிப்ரவரி 3 வரை மழைக்கு சாதகம்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே நனைக்கும் மழை முதல் மிதமான மழை பொழிவு வரை இருக்கும்.
ஜனவரி 30 மதியம் , மாலை  சற்று கூடுதல் பரப்பு பொழிவாக மாறும்.
டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் சற்று கனமழை முதல் ஓரிரு இடங்களில் கனமழை பொழிவு வரை இருக்கும்.
மத்திய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்கள் பரவலான மழை வாய்ப்பு.

 ஜனவரி 30, 31 பிப்ரவரி 1 ,2 ,3ஆகிய தேதிகளில்  ஆங்காங்கே அனைத்து மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்பு.

கனமழை உறுதியாக எதிர்பார்க்கும் மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களில் கடலோர  பகுதி, தென்கடலோரப் பகுதிகள், ஒட்டுமொத்த தென் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கன மழை உறுதி.
தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு.
அறுவடை விவசாயிகளுக்கு ஆலோசனை
முதிர்ந்த , அறுவடைக்கு பக்குவம் அடைந்த தானியங்கள் ஜனவரி 30 முற்பகல் நனைக்காமல் இருந்தால் ஜனவரி 30 முற்பகலுக்குள் அறுவடை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

அறுவடைக்கு ஜனவரி 30 பிற்பகல் ஜன 31 பிப்ரவரி 1 2 3 தேதிகளில் நாள் குறிக்க வேண்டாம்.
ஜனவரி 30 மதியத்திற்கு மேல் மழை பொழிவு உறுதி..

அச்சம் பீதி வேண்டாம்

கடந்த வாரம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதிகளில் எதிர்பார்ப்பை விட கூடுதல் மழை பொழிந்து அறுவடை வயல்களில் இன்னும் நீர் தேங்கி உள்ளது.

அதே போல் அகஸ்தியன்பள்ளி கடிநெல்வயல்
பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்க பட்டது.

அப்பொழுது அவர்கள் முன்னெச்சரிக்கை எடுக்காததால் வேதனை அடைந்தார்கள்.

வரக்கூடிய ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை நல்ல மழை பொழிவு தெரிகிறது.
மண்டலமாவது உறுதி.
 இலங்கையை நெருங்குவது உறுதி.
டெல்டா தென் மாவட்டங்கள் மழை உறுதி.
தெற்கு டெல்டா தென்கடலோர மாவட்டங்கள் சற்று  கனமழை வரை உறுதி.
தென் மாவட்டங்கள் டெல்டாவின் பிற வடக்கு 
பகுதிகள், தென் மாவட்டங்களில் பிற பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மிதமானது முதல் சற்று கனமழை உறுதி.
வடகடலோரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் வடக்கு பகுதி மத்திய உள் மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழைப்பொழிவு இருக்கும்.கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் வடக்கு உள் மாவட்டங்கள் ஓரிரு நாள் ஆங்காங்கே லேசான மிதமான மழைப்பொழிவு இருக்கும்.
குளிர் காற்று இணைவு சதவீதம், வெப்ப நீராவி இணைவு சதவீதம், மண்டலத்தின் தீவிரத் தன்மை, இலங்கை நெருங்கி வந்து அமையும் இடம் பொறுத்து  மழை பொழிவின் கூடுதல் குறைவு ஏற்படலாம்.  இவை அனைத்தும் தொடர்ந்து ஆய்வில் உள்ளது.உங்கள் ஊருக்கு
சாதாரண மிதமான மழையா?சற்று கனமழையா!கன மழையா?
அதன் குணம் எப்படி?
ஆய்வறிக்கையுடன் இணைந்தே இருந்து திட்டமிட்ட வேளாண் பணி செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அறுவடை செய்வது எப்போது?

பிப்ரவரி 3 க்குப் பிறகு மழை விலகும் என்பதால் பிப்ரவரி 4 க்கு பிறகு காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம். அச்சம், பீதி வேண்டாம்.

பிப்ரவரி மார்ச் மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து  இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச்  மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங்  சரியாக செட்டாகும் பொழுது  அவ்வப்பொழுது மழை கொடுக்கும். 

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள்  பருவமழை தொடங்கிவிடும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை  இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை  முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.
வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு  இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.


ந. செல்வகுமார்.
30.1.2023 -4AM வெளியீடு.


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog