05.01.2023 வியாழன் அதிகாலை ஆய்வறிக்கை.
காற்று சுழற்சி மிகவும் மெல்ல நிலநடுக்கோட்டுப் பகுதியை ஒட்டி மேற்கு நோக்கி நகர தொடங்கியது.
காற்று சுழற்சி காரணமாக ஜனவரி 3 வேதாரணியம் தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் ஆங்காங்கே மழை கொடுத்து நிலையில்,ஜனவரி 4 சென்னை மாநகரில் ஆங்காங்கே ஆங்காங்கே நனைக்கும் மழை கொடுத்த நிலையில், இன்று ஜனவரி 5 அதிகாலை புதுச்சேரி விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் மழை பொழிவை கொடுக்கிறது.திருக்கோயிலூர் கிராமப்புற பகுதிகளில் கூட மழைப்பொழிவு காணப்படுகிறது
இன்று ஜனவரி 5 காலை மதிய நேரங்களில் மயிலாடுதுறை கடலூர் காரைக்கால் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தூறல் நனைக்கும் மழைக்கு வாய்ப்புள்ளது.
திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓர் இடங்களில் தூறல் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த காற்று சுழற்சி நிலநடுக்கோட்டு பகுதியில் மேற்கு நோக்கி நகருகிற காரணத்தால் ஜனவரி 5 முதல் கிழக்கு காற்று தமிழகத்தில் நுழைந்து ஜனவரி 5 முதல் குளிர் பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டத்துடன் வானிலையை உருவாக்கும்.
ஜனவரி 5 முதல் 9 முடிய இடைப்பட்ட நாள்களில் அவ்வப்பொழுது சில நிமிடங்கள் டெல்டா கடலோரம் (கடற்கரை ஓர கிராமங்கள் மட்டும் உறுதி) தென்கடலோரம் தூறல் நனைக்கும் மழையை கொடுப்பதற்கு வாய்ப்பு.
பசிபிக் பெருங்கடலின் நிகழ்வு ஜனவரி 8,9 தேதிகளில் அந்தமான் கடற்பகுதிக்கு வந்து ஜனவரி 11 12 13 தேதிகளில் இலங்கைக்கு மழை கொடுக்கும் வகையில் அமைந்து அவ்வப்பொழுது சில நிமிடங்கள் டெல்டா கடலோரம் (கடற்கரை ஓர கிராமங்கள் மட்டும் உறுதி) தென்கடலோரம் தூறல் நனைக்கும் மழையை கொடுப்பதற்கு வாய்ப்பு.
இதன் காரணமாக ஜனவரி 11 க்கு மேல் டெல்டா கடலோரம் தென்கடலோரம் குழப்பமான வானிலை மேகமூட்டம் இருக்கும்.
ஜனவரி 5 முதல் இலங்கையில் ஆங்காங்கே மழை காணப்படும்.
குளிர் காற்று தான் பசிபிக் பெருங்கடல் தென் சீனக்கடல் தாய்லாந்து வளைகுடா வழியாக தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா வரை பயணிக்கிறது.
இந்தக் குளிர் காற்று வங்கக்கடலிலும் இந்த ஆண்டு இரண்டு முறை நுழைந்து மழை பொழிவின் வழக்கமானகுணத்தையும் தீவிர தன்மையையும் நகர்வையும் மாற்றி அமைத்தது.
ஜனவரி 16 முதல் 24 வரை இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் தெற்கு பகுதிக்கு நிகழ்வு வர வாய்ப்பு.
மேற்கண்ட நிகழ்வு இலங்கை தெற்கு பகுதி வருவது உறுதி . அது தமிழகத்திற்கு தூறல் மழை பொழிவை எந்த அளவிற்கு முன்னேறி கொடுக்கும் என்பதை வரக்கூடிய நாள்களில் உறுதிப்படுத்தலாம்.
மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை
ஜனவரி 5 முதல் மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் எடை குறைந்த படகுகளுக்கு சவால் நிறைந்த காற்று இருக்கும்.
ஜனவரி 6 கண்டிப்பாக மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதியில் வலுவான காற்று இருக்கும்.
நம்முடைய துல்லிய வானிலை (அதிகாலை இரவு இரு நேரங்கள்) அறிக்கையை ஆண்டு முழுவதும் பார்த்து திட்டமிட்ட துல்லிய வேளாண்மை செய்து லாபம் அடையுங்கள்.
ந. செல்வகுமார்